செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகில் எல்லா பயங்கரவாதத் தாக்குதல்களையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லையே என்பது ஏமாற்றம் | அதிபர் ஒபாமா உலகில் எல்லா பயங்கரவாதத் தாக்குதல்களையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லையே என்பது ஏமாற்றம் | அதிபர் ஒபாமா

உலகில் எல்லா பயங்கரவாதத் தாக்குதல்களையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லையே என்பது ஏமாற்றம் | அதிபர் ஒபாமா உலகில் எல்லா பயங்கரவாதத் தாக்குதல்களையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லையே என்பது ஏமாற்றம் | அதிபர் ஒபாமா

1 minutes read

உலகில் எல்லா பயங்கரவாதத் தாக்குதல்களையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லையே என்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறினார்.

மேலும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததைவிட ஆப்கனில் கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை நிறுத்தப் போவதாகவும் அவர் கூறினார்.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக இந்தப் புதிய முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். அமெரிக்க பாதுகாப்புத் துறை செயல்பாடுகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு, அதன் தலைமையகமான பென்டகனில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் எங்காவது பயங்கரவாதத் தாக்குதல் நிகழும்போதும், அதைத் தடுக்காமல் போய்விட்டோமே என்ற ஏமாற்றம் ஏற்படுகிறது.

எல்லா பயங்கரவாதத் தாக்குதலையும் தடுக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம். ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமல்லாமல், இராக், ஆப்கானிஸ்தான், லெபனான் என உலகின் எந்தப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நிகழும்போதும், வேறு நாடுகள் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் – இல்லாவிட்டாலும், அமெரிக்கா அதனைத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.

1970-கள் தொடங்கி உலகின் வெவ்வேறு பகுதிகளில் பயங்கரவாதச் செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றை ஒடுக்க புதிய வியூகங்களை அமெரிக்கா வகுத்து வருகிறது.

என்னுடைய 8 ஆண்டு ஆட்சியில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டேன் என்று கூறிக் கொள்ள முடியாது. எனக்குப் பின்னால் அதிபர் பதவி வகிக்கப் போகிறவர்களும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் அல்-காய்தாவை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம். ஆப்கனில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அழிக்கும் வரை அமெரிக்க வீரர்கள் அந்த நாட்டில் நிறுத்தப்படுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறோம். இவ்வாண்டு இறுதிக்குப் பிறகு 5,500 வீரர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள் என அறிவித்திருந்தோம். ஆனால் ஐ.எஸ். அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதன் காரணமாக அங்கு கூடுதல் வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானில் 8,500 வீரர்கள் பயங்கரவாதத் தடுப்புக்காக நிறுத்தப்படுவார்கள்.

பயங்கரவாதத்தை அழிப்பதற்கு வழக்கமான ராணுவ நடவடிக்கைகள் மட்டும் போதாது. பயங்கரவாதிகளின் தொடர்புகளைத் துண்டிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பிற நாடுகளின் முழு ஒத்துழைப்பையும் நாம் பெற வேண்டும் எனக் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.