செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு | அதிபர் சிறீசேனா விளக்கம்65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு | அதிபர் சிறீசேனா விளக்கம்

65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு | அதிபர் சிறீசேனா விளக்கம்65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு | அதிபர் சிறீசேனா விளக்கம்

1 minutes read

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது காணாமல்போன 65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை அடுத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, 65,000 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அல்லது இறந்துவிட்டார்களா? உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனில், அவர்கள் எங்கு? எப்போது இறந்தார்கள்? என்பது குறித்து தகவல்களை திரட்டும் நோக்கில், ஒரு அலுவலகத்தை அமைப்பதற்காக மசோதா கொண்டுவரப்பட்டு கடந்த 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், ராணுவத்தினரை தண்டிப்பதற்காகவே காணாமல்போனவர்கள் குறித்த விவரங்களை அரசு சேகரிக்க முயலுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய உதவியை அளிப்பது மட்டுமே அரசின் நோக்கம். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கை அரசின் இந்த முயற்சிக்கு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.