செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குடி போதையில் கார் ஓட்டிய பெண் மந்திரி | சுவீடன்குடி போதையில் கார் ஓட்டிய பெண் மந்திரி | சுவீடன்

குடி போதையில் கார் ஓட்டிய பெண் மந்திரி | சுவீடன்குடி போதையில் கார் ஓட்டிய பெண் மந்திரி | சுவீடன்

1 minutes read

ஐரோப்பிய நாடான சுவீடன் பெண் மந்திரி எய்டா ஹட்ஷியாலிக் (29). மிக குறைந்த வயது. இளம் மந்திரியான இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இவர் ஊழல் செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் பதவியை இழக்கவில்லை. அளவுக்கு மீறி மது குடித்ததால் ஏற்பட்ட போதையின் போது கார் ஓட்டிச் சென்றாராம்.

அப்போது அவரை மல்மோ நகரில் போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை சோதனைக்கு அனுப்பினர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததும் ஆல்கஹால் ரத்தத்தில் கலந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் சுவீடனில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண் மந்திரி குடி போதையில் கார் ஓட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து எய்டா தனது மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

எனது வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது. அதற்கு பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்கிறேன் என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

எய்டா ஹட்ஷியாலிக் போஸ்னியாவை சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு அகதியாக வந்தார். தனது கடின உழைப்பால் மக்கள் செல்வாக்கு பெற்று மந்திரி ஆனார். தற்போது குடி போதையில் பதவி இழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.