செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 8 நாடுகளின் அங்கீகாரங்களையும் வென்றுள்ளகனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில் 8 நாடுகளின் அங்கீகாரங்களையும் வென்றுள்ளகனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில்

8 நாடுகளின் அங்கீகாரங்களையும் வென்றுள்ளகனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில் 8 நாடுகளின் அங்கீகாரங்களையும் வென்றுள்ளகனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில்

1 minutes read

அருண் சிதம்பரம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் ‘கனவு வாரியம்’. இவர் ‘ஆணழகன்’ சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர். அ.சிதம்பரம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி ஆலோசகராக இருந்தவர்.

அருண் சிதம்பரம் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (MS) முடித்துவிட்டு புகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகாகோவில்) பணிபுரிந்தார். அருண் சிதம்பரம், மறைந்த மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களால் பெரிதும் பாரட்டப்பட்டவர். இவரும், கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை  தயாரித்துள்ளனர்.

தமிழக கிராமங்களில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு குழந்தைகள் கொண்டாடும் வகையில் படமாக்கப்பட்ட கமர்ஷியல் திரைப்படம் ‘கனவு வாரியம்’, ஜீன் 11 முதல் 19 வரை சீனாவில் நடைபெற்ற 19 வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் பேராதரவுடன் 4 அரங்கு நிறைந்த காட்சிகள் திரையிடப்பட்டது.

 

இதுவரை ‘கனவு வாரியம்’ திரைப்படம் 6 சர்வதேச விருதுகளையும் 8 நாடுகளின் அங்கீகாரங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கனவு வாரியம்’ திரைப்படம் வென்ற விருதுகள் வருமாறு

  • அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்டினம் ரெமி’ விருது
  • இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் சிறந்த குழந்தைகள் பாடலுக்கான ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருது
  • 49-வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த படத்திற்கான விருது
  • அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ‘17 வது பேர் போன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’வில் விருது
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்பட விழா’வில் விருது
  • மத்திய அரசால் நடத்தப்படும் ‘தேசிய அறிவியல் திரைப்பட விழா’வில் (National Science Film Festival) சிறப்பு விருது

திரையிடப்பட்ட மேலை நாடுகளில் எல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் குழந்தைகளின் பாராட்டையும் பெற்றுள்ளது. ‘கனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில் வெளிவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.