செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முன்னாள் ராணுவ வீரர் 93 வயதான 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி கடந்து சாதனைமுன்னாள் ராணுவ வீரர் 93 வயதான 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி கடந்து சாதனை

முன்னாள் ராணுவ வீரர் 93 வயதான 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி கடந்து சாதனைமுன்னாள் ராணுவ வீரர் 93 வயதான 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி கடந்து சாதனை

1 minutes read

பசிபிக் முதல் அட்லாண்டிக் கடற்கரை வரை 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி 93 வயது அமெரிக்க ராணுவ வீரர் சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் சான்டியாகோ நகரை சேர்ந்தவர் எர்னி ஆண்ட்ரஸ். 93 வயதான இவர் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அமெரிக்காவில் பசிபிக் கடற்கரையில் தொடங்கி அட்லாண்டிக் கடற்கரை வரை ஓடி சாதனை படைக்க விரும்பினார்.
அதாவது 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி கடந்து சாதனை படைக்க முடிவு செய்தார். அதற்கான முயற்சியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியாவில் உள்ள சைமன் தீவில் இருந்து தொடங்கினார்.

கடந்த வாரம் அதாவது 19-ந் தேதி தனது 93 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவர் நேற்று பசிபிக் முதல் அட்லாண்டிக் கடற்கரை வரையிலான 4 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை ஓடி கடந்து சாதனை படைத்தார்.

அப்போது களைப்பு காரணமாக அவரால் ஓட முடியவில்லை. எனவே சிறிது நேரம் அமரும்படி கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டு விடாமல் தொடர்ந்து ஓடி முடித்தார்.

இதற்காக கலிபோர்னியாவில் உள்ள தனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.