
தீபாவளியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிடப்படவுள்ளது.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், தீபாவளிப் பண்டிகையைச் கவுரவிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையை அமெரிக்க அரசு வெளியிடவுள்ளது. வாணவேடிக்கை பின்னணியில், எரியும் அகல் விளக்கு இருப்பது தபால் தலையில் இடம் பெற்றுள்ளது.
இச்சிறப்பு தபால் தலை வரும் அக்., 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படம் எனவும், நவம்பர் மாதம் முதல் அமெரிக்க தபால் துறை இதனை விற்பனை செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.