செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 8 போர் நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது பாகிஸ்தான்8 போர் நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது பாகிஸ்தான்

8 போர் நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது பாகிஸ்தான்8 போர் நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது பாகிஸ்தான்

1 minutes read

ரூ.3.5 ஆயிரம் கோடி அளவிலான ஒப்பந்தம்படி சீனாவிடம் இருந்து 8 போர் நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தான் வாங்குகிறது.

பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு நிலைக்குழுவிடம் கடந்த 26-ம் தேதி 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இந்த ஒப்பந்த விபரத்தை எடுத்துரைத்து உள்ளனர் என்று பாகிஸ்தான் அரசு மீடியா தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு துறை நிலைக் குழுவிடம் அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் கொடுத்து உள்ள அறிக்கை, அடுத்த தலைமுறை
நீர்மூழ்கி கப்பல்கள் திட்டம் முன்னோக்கி செல்கிறது என்பதை காட்டுகிறது என்று ரேடியோ பாகிஸ்தான் தகவல் வெளியிட்டு உள்ளது. கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் கடற்படையின் மூத்த அதிகாரி, 8 நீர்மூழ்கி கப்பல்களில் 4 கப்பல்களை வழங்கும் ஒப்பந்தத்தை கராச்சி கப்பல் கட்டும் மற்றும் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பெற்று உள்ளது, ஏர் இன்டிபென்டன் ப்ரோபல்சன் சிஸ்டத்தை கொண்டிருக்கும் என்று அறிவித்தார்.

இத்திட்டத்திற்கு ஆகும் மொத்த செலவிற்கும் தேவையான நிதி உதவியை குறைந்த வட்டியில் வழக்க பாகிஸ்தானுக்கு வழங்கும் நீண்டகால கடனை நீட்டிக்க சீனா எதிர்பார்ப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் கப்பல் கட்டும் மற்றும் விற்பனை நிறுவனத்தினால் எந்த வகையான நீர்மூழ்கி கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. முதல் கட்டமாக 4 நீர்மூழ்கி கப்பல்கள் 2023-ம் ஆண்டு இறுதிக்குள்ளும், மீதம் இருக்கும் 4 நீர்மூழ்கி கப்பல்கள் கராச்சியில் 2028-ம் ஆண்டுக்குள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் டைப் 039 மற்றும் டைப் 041 யுவான் வகை போர் நீர்மூழ்கி கப்பல்களாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் ராணுவ தளவாடங்களை சப்ளை செய்கிறது, போர் டாங்கிகள், போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்குகிறது. இருநாடுகளும் இணைந்து J-17தண்டர் போர் விமானங்களையும் தயாரித்து உள்ளது. பாகிஸ்தானில் மொத்தம் 8 நீர்மூழ்கி கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.