செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எதிராக போராட்டம் | இலங்கைஐ.நா. பொதுச் செயலாளருக்கு எதிராக போராட்டம் | இலங்கை

ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எதிராக போராட்டம் | இலங்கைஐ.நா. பொதுச் செயலாளருக்கு எதிராக போராட்டம் | இலங்கை

0 minutes read

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின்னர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் 2–வது முறையாக 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் நடைபெற்று வரும் மறுகட்டமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக அவர் இலங்கை சென்றுள்ளார். கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் பான் கி மூன் நேற்று தங்கியிருந்தபோது அவருக்கு எதிராக இரு அமைப்பினர் அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ராவண படை’ என்ற புத்த சாமியார்கள் மற்றும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை புலிகள் கிளர்ச்சி செய்தபோது ஐ.நா. அமைப்பு எங்கே போனது?, இலங்கை விவகாரத்தில் ஐ.நா. தலையிடுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். போராட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தில் நுழைந்துவிடாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.