ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டிக்கும் வகையில், குடியரசு கட்சி எம்.பி. 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஃப்ளோரிடா மாகாணத்தில் ஸிகா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குடியரசு கட்சி எம்.பி. டேவிட் ஜோலி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந்த அவர், 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து வந்து எம்.பி.க்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து டேவிட் ஜோலி கூறுகையில், ” ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து 100 கொசுக்களைப் பிடித்துக் கொண்டு வந்துள்ளேன். இவை அனைத்துக்கும், ஸிகா வைரஸ் பரப்பும் தன்மை உள்ளது. நிலைமையின் தீவிரத்தையும், அச்சுறுத்தலையும் உணர்த்தவே இந்த வழிமுறையைக் கையாண்டேன்’ என்றார்.
2