செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடகொரியா 5–வது முறையாக அணுகுண்டு சோதனை | உலக நாடுகள் அதிர்ச்சிவடகொரியா 5–வது முறையாக அணுகுண்டு சோதனை | உலக நாடுகள் அதிர்ச்சி

வடகொரியா 5–வது முறையாக அணுகுண்டு சோதனை | உலக நாடுகள் அதிர்ச்சிவடகொரியா 5–வது முறையாக அணுகுண்டு சோதனை | உலக நாடுகள் அதிர்ச்சி

1 minutes read

வடகொரியா 5–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி, அது வெற்றி அடைந்திருப்பதாக அறிவித்தது. வடகொரியாவின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும், பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

2006–ம் ஆண்டு ஜனவரி மாதம் 9–ந் தேதி முதன் முதலாக அணுகுண்டு வெடித்து சோதித்த அந்த நாடு தொடர்ந்து 2009, 2013 ஆண்டுகளில் அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. நான்காவதாக கடந்த ஜனவரி மாதம் 6–ந் தேதி அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்தது. (இதுவும் அணுகுண்டு சோதனையாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது). நேற்று 5–வது முறையாக மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை வடகொரியா அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சோதனை புங்கியே–ரி என்ற இடத்தில் நிலத்துக்கு அடியில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை இதுவரை வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைகளை விட ஆற்றல் வாய்ந்தது என சொல்லப்படுகிறது. இந்த அணுகுண்டு சோதனை வெற்றி கண்டிருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இதுபற்றி வடகொரியா, ‘‘புதிதாக தயாரிக்கப்பட்ட அணுகுண்டு சோதிக்கப்பட்டது. இதன்மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நடுத்தர ஏவுகணையில் அணுகுண்டை செலுத்தும் திறனை அடைந்திருக்கிறோம்’’ என கூறி உள்ளது.

இந்த அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து அங்கு இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் சர்வே, ஐரோப்பிய அமைப்புகள் கூறின.

இதுபற்றி வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியாவின் கூட்டுப்படைகளின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இன்று (நேற்று) வடகொரியாவின் புங்கியே–ரி பகுதியில் செயற்கையான முறையில் ஏற்பட்ட நில நடுக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது 5 புள்ளி அளவுக்கு இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அணுகுண்டு சோதனை நடத்தியதின் விளைவா என்பதை ஆராய்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த 5–வது அணுகுண்டு சோதனையின்போது ஏற்பட்ட தாக்கம், 10 டன் வெடிபொருட்கள் வெடித்ததைப் போன்று இருந்தது என தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் முதல் கட்ட தகவல்கள் 20 டன் வெடிபொருட்கள் வெடித்ததுபோன்ற சத்தத்தை ஏற்படுத்தியதாக கூறின.

இரண்டாவது உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா வீசிய ‘சின்னப்பையன்’ என்ற அணுகுண்டு 15 டன் வெடிபொருட்களை வெடித்ததுபோன்ற சத்தத்தை ஏற்படுத்தியது என்பது நினைவுகூரத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.