செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தான் தலிபான் தளபதி ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் பலிபாகிஸ்தான் தலிபான் தளபதி ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் பலி

பாகிஸ்தான் தலிபான் தளபதி ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் பலிபாகிஸ்தான் தலிபான் தளபதி ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் பலி

1 minutes read

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேட்டோ மற்றும் அந்நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் தலைக்கு 2 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான்.

பாகிஸ்தானில் இயங்கிவரும் முக்கியமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாக தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் கருதப்படுகிறது. இதன் தலைவனான ஹக்கீமுல்லா மசூத் கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டான்.

இந்த தீவிரவாத இயக்கத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்த அசாம் கான் தாரிக் பின்னர் தளபதியாக பொறுப்பேற்று, பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அரங்கேற்றி வந்தான்.

ராயிஸ் கான் என்றும் அழைக்கப்படும் இவனது தலைக்கு பாகிஸ்தான் அரசு 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்து தேடி வந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்திகா மாகாணத்தில் நேட்டோ மற்றும் அந்நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் அசாம் கான் தாரிக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அசாம் கான் தாரிக்கின் மகன் மற்றும் மேலும் 9 பேர் பலியானதாகவும் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.