செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரைசர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரை

சர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரைசர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரை

1 minutes read

இந்த வருடத்திற்கான, சர்வதேச ஆசிரியர் விருதுக்கு, இந்தியாவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவோருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.

 

மும்பையில் உள்ள எம்இடி ரிஷிகுல் வித்யாலாயா சர்வதேச பள்ளியில் இயற்பியல் ஆசிரியையான கவிதா சங்வி, இயற்பியல் பாடத்தை கற்பிக்கும் முறைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். புத்தகங்களில் உள்ள பாடத்தை, வாழ்க்கையில் நேரடியாக சந்திக்கும் அனுபவங்களுடன் ஒப்பிட்டு, கவிதா பாடம் கற்பித்து வந்தார்.

 

 

விருது தொடர்பாக கவிதா கூறுகையில், கடந்த சில நாட்களாக, நான் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தொடர்பான செய்தியும், டாப் 50 பட்டியலில் எனது பெயர் இருப்பது பற்றிய செய்தியும் வந்து கொண்டுள்ளது. இதனை அறிந்து எனக்கு, வானில் நடப்பது போல் உள்ளது. என்னை தொழில் ரீதியாக பலத்தை கூட்ட உதவியவர்களை நான் தற்போது நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். இந்த விருது என்னை ஊக்கப்படுத்தும். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என தூண்டுகிறது. மாணவர்கள், என்னுடன் பணிபுரியம் ஆசிரியர்கள் அனைவரையும், பொறுப்பானவர்களாகவும், சமூக வளர்ச்சியில் அக்கறை உடையவர்களாகவும் மாற்றும் பொறுப்பும் கடமையும் எனக்கு வந்துள்ளது என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.