செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விம்பிள்டன் சாம்பியனான முன்னாள் டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திகுத்துவிம்பிள்டன் சாம்பியனான முன்னாள் டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திகுத்து

விம்பிள்டன் சாம்பியனான முன்னாள் டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திகுத்துவிம்பிள்டன் சாம்பியனான முன்னாள் டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திகுத்து

1 minutes read

விம்பிள்டன் சாம்பியனான செக்குடியரசு முன்னாள் டென்னிஸ் வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்தி உள்ளனர்.
செக்குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா. 26 வயதான அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிசில் 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர். காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் இவர், செக்குடியரசின் கிழக்கு பகுதியில் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று காலை அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர் கிவிடோவாவின் வீட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தான். அப்போது அங்கு இருந்த கிவிடோவா சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், மறைத்து வைத்து இருந்த கத்தியால் கிவிடோவாவை குத்தி விட்டு, தப்பி ஓடினான். தடுக்க முயன்ற கிவிடோவாவுக்கு கையில் கத்திக்குத்துகள் விழுந்தன.
இதில் இடது கையில் பலத்த காயம் அடைந்த கிவிடோவா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காயம் உயிருக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், இடது கையால் விளையாடும் பழக்கம் கொண்ட கிவிடோவா காயம் குணம் அடைந்து விரைவில் களம் திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது. கிவிடோவாவின் வீட்டுக்குள் நுழைந்தவர் யார்? என்ன நோக்கத்துக்காக அங்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.