செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சாதனைக்கு வயது தடை இல்லை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர்சாதனைக்கு வயது தடை இல்லை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர்

சாதனைக்கு வயது தடை இல்லை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர்சாதனைக்கு வயது தடை இல்லை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர்

1 minutes read

 

‘ சாதனைக்கு வயது தடை இல்லை’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் ராபர்ட் மார்சண்ட். இவர் பிரான்சை சேர்ந்தவர். இவர் பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதான ஓடு தளத்தில் சைக்கிள் ஓட்டினார்.

1 மணி நேரத்தில் இவர் 22.5 கி.மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இவர் தனது 102 வயது வயதில் 26.9. கி.மீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டியுள்ளார். 1911-ம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார்.

தனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். 2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். அதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.