5
இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் வெரோனா அருகே ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த பேருந்து ஒன்று நேற்றிரவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. திடீரென, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய தூணின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பேருந்து தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் அந்தப் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தை ஓட்டி வந்த டிரைவரும் உயிரிழந்தார். மேலும், 12-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்த தகவலறிந்து விரைந்துவந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.