செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்த அதிசயம் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்த அதிசயம்

80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்த அதிசயம் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்த அதிசயம்

1 minutes read

சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பயணிகள் விமானத்தில் ஆட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பறவைகள், விலங்குகள் பயணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் சவுதி அரேபியா இளவரசர் ஒருவரின் 80 பருந்துகள் விமானத்தில் ஆட்களுடன் பயணம் செய்தன.

பருந்து ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. எனவே அது அங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் மூலம் அவை பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொராக்கோ மற்றும் சிரியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.

அந்த வகையில் சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்தன. அவற்றின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அவை இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்தன.

பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் பிரசுரமாகி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை தனது விமானி நண்பர் வழங்கியதாக அதை வெளியிட்டவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.