மலையாளத்தில் தீலிப் தற்போது நடித்து வரும் படம் ‘ராம்லீலா’. இது முழுக்க முழுக்க அரசியல் களத்தை பின்னணியாக கொண்ட கதை. இதற்கு முன்பு ‘லயன்’ என்ற படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்த திலீப் இதில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் அரசியல் வாதியாக நடிக்கிறார். அவருக்கு எம்.எல். ஏ. வேடம். அது மட்டுமல்ல அவருடைய அம்மாவும் பொது நலனில் தீவிர அக்கறையுடன் அரசியல் களத்தில் இறங்குபவராக கதை அமைக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஒரு பக்கமாக சாயாமல் பொது மக்களுக்காக நடுநிலையில் நின்று குரல் கொடுக்கும் வேடம். இதில் அம்மாவாக ராதிகா நடிக்கிறார்.
கதாநாயகியாக வலம்வந்த ஆரம்பகாலத்தில் ராதிகா மலையாளத்தில் நடித்தார். இப்போது 24 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த மலையாளப் படத்தில் நடிக்கிறார்.
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளக்கும் வேடம். தாயும்- மகனும் மோதும் காட்சிகளும் உண்டு. இந்த படத்துக்கு சாச்சி கதை எழுத, அருள் கோபி இயக்குகிறார்.