செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மலேசிய இளவரசியை மணந்த நெதர்லாந்து கால்பந்து வீரர்

மலேசிய இளவரசியை மணந்த நெதர்லாந்து கால்பந்து வீரர்

0 minutes read

மலேசிய இளவரசி துங்கு துன் ஆமினா சுல்தான் இப்ராகிம் (31). இவர் ஜோகேள் சுல்தானின் ஒரே மகள் ஆவார். நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ் (28).

டென்னிஸ் சிங்கப்பூர் கால்பந்து அணியில் மார்க்கெட்டிங் மானேஜராக பணிபுரிந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா வந்து இருந்தார்.

ஒரு ஓட்டலில் காபி குடிக்க சென்ற போது இளவரசி துங்குவை சந்தித்தார். அதன் மூலம் நண்பர்களான இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்.

பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து டென்னிஸ் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை டென்னிஸ் முகமது அப்துல்லா என மாற்றிக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் மலேசியாவில் ஜோகேளில் உள்ள செரீன் ஹில் அரண்மனையில் நடந்தது. அதில் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.