செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய அணுஆயுத தடையை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதிர்ப்பு | ஐ.நா.சபை

புதிய அணுஆயுத தடையை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதிர்ப்பு | ஐ.நா.சபை

1 minutes read
பேரழிவை உருவாக்கும் அணுஆயுதங்களை வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் குவித்து வைத்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற வளரும் நாடுகள் குறைந்த அளவில் வைத்திருக்கின்றன. தற்போதைய நிலையில் 15 ஆயிரம் அணுஆயுதங்கள் உலகில் இருப்பதாக நம்பப்படுகிறது. 2-ம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய 2 அணுகுண்டுகள் ஏற்படுத்திய பேரழிவை பார்த்து அதிர்ந்து போன உலக நாடுகள், அணுஆயுத விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்கின்றன. குறிப்பாக இத்தகைய ஆயுதங்களை ஒழிப்பதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச அளவில் அணுஆயுதப்பரவல் தடை ஒப்பந்தமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இத்தகைய அணுஆயுத பரவலை தடுக்க முடியவில்லை. வடகொரியா போன்ற நாடுகள் தொடர்ந்து அணுஆயுத சோதனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இது வடகொரியா, அமெரிக்கா இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.
அணுஆயுதங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா. சபை தயாரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நாடுகள் எந்த சூழ்நிலையிலும் அணுஆயுதங்களை தயாரித்தல், சோதனை செய்தல், விற்பனை செய்தல், பிற நாடுகளிடம் இருந்து தொழில் நுட்பங்களை வாங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
இந்த ஒப்பந்தத்தின் அவசியத்தை சமீபத்தில் விளக்கிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டானியோ குட்டரெஸ், அணுஆயுதம் இல்லா ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான நோக்கத்தில் இது ஒரு முக்கியமான படிநிலை என குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து போட்டால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். அந்தவகையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று வரும் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தில் பிரேசில், கயானா, தாய்லாந்து, வாடிகன், இந்தோனேஷியா, அயர்லாந்து, அல்ஜீரியா, வெனிசூலா உள்ளிட்ட 50 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. மேலும் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்பந்தத்தை ஆதரித்து வருகின்றன. இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சிறிய நாடுகள் ஒருபுறம் அணிவகுத்து நிற்க, அதிக அளவில் அணுஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளும், அவற்றின் நட்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை புறக்கணித்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் தடை நடவடிக்கை மூலம் எந்த நன்மையும் ஏற்படாது என அவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.