செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எச்சரிக்கையை மீறி புதிய ஏவுகணையை பரிசோதித்த ஈரான்

எச்சரிக்கையை மீறி புதிய ஏவுகணையை பரிசோதித்த ஈரான்

1 minutes read

அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான், சர்வதேச நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்யப் போவதாக அறித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ராணுவ அணிவரிசையில் ஈரான் தயாரித்த புதிய ஏவுகணையான கோராம்ஷர் ஏவுகணை இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அந்த புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து விட்டதாக ஈரான் அரசு இன்று அறிவித்துள்ளது.

இது போன்ற அணு ஆயுத சோதனை நடத்துவது 2015-ம் ஆண்டில் போடப்பட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கையை மீறி ஈரான் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை பல ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் அருகில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம். மேலும், இது நாட்டின் ராணுவ சக்தி மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.