செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரூ.245 கோடிக்கு ஏலம் | 1000 ஆண்டு பழமையான சீன கோப்பை

ரூ.245 கோடிக்கு ஏலம் | 1000 ஆண்டு பழமையான சீன கோப்பை

0 minutes read

கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதை வாங்கியவர் யார் என்ற விவரத்தை வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது. இந்த கோப்பை தொடக்க விலையாக ரூ.66 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஏலம் போன் மூலம் கேட்கப்பட்டது. போட்டி கடுமையாக இருந்ததால் ஏலம் 20 நிமிட நேரம் நடந்தது.

இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை அதிகபட்சமாக ரூ.233 கோடிக்கு ஏலம் போனது. தற்போது அந்த சாதனையை இக்கோப்பை முறியடித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.