செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 30 எம்.பி.க்கள் இங்கிலாந்து பிரதமர் பதவி விலக போர்க்கொடி

30 எம்.பி.க்கள் இங்கிலாந்து பிரதமர் பதவி விலக போர்க்கொடி

1 minutes read

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என பொது வாக்கெடுப்பில் மெஜாரிட்டியான மக்கள் வாக்களித்தனர். எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.

அவருக்கு பதிலாக தெரசா மே பதவி ஏற்றார். இவர் கேமரூன் அரசில் மந்திரியாக பதவி வகித்தார். மார்க்கரெட் தாட்சருக்கு பிறகு இவர் இங்கிலாந்தின் 2-வது பெண் பிரதமரானார். இவரை தாட்சருடன் ஒப்பிட்டு இரும்பு பெண்மணி என வர்ணித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆட்சி காலம் 3 ஆண்டுகள் இருந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவித்தார். அதில் அவரது கன்சர் வேடிவ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி மந்திரி சபை அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் அதை சமாளித்து தாக்கு பிடித்து தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தெரசா மேவுக்கு கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர் கிரான்ட் சாப்ஸ் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இவர் ஆளும் கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏக்களுடன் இணைந்து தெரசா மேவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தெரசா மேவை எதிர்க்கும் எம்.பி.க்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர். கட்சி தலைவர் மற்றும் பிரதமரை மாற்ற 48 எம்.பி.க்கள் இணைந்து கமிட்டிக்கு மனு கொடுக்க வேண்டும்.

அதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.