செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஷ்யா 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு ஐ.எஸ் போஸ்டர் மூலம் மிரட்டல்

ரஷ்யா 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு ஐ.எஸ் போஸ்டர் மூலம் மிரட்டல்

0 minutes read
உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்தாண்டு ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பணிகள் முடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.எஸ் ஆதரவு இணையதளமான வாஃபா மீடியா பவுண்டேஷன் என்ற தளமானது விளையாட்டு உலகத்தை அதிரவைக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கண்கள் மற்றும் வாயிலிருந்து ரத்தம் சிந்தும் வகையில் கம்பிகளுக்கு பின்னார் அவர் இருப்பது போல ஒரு போஸ்டரை அந்த தளம் வெளியிட்டுள்ளது.
மேலும், அகராதியிலிருந்து தோல்வி என்ற வார்த்தை எடுக்கப்பட்ட மாநிலத்திற்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள்” என்ற வாசகமும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. பிரபல நைக் நிறுவனத்தின் மந்திரமான “ஜஸ்ட் டூ இட்” என்பது போல “ஜஸ்ட் டெர்ரரிசம் (தீவிரவாதம்)” என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.