செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவிய சமந்தா

15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவிய சமந்தா

0 minutes read

சமந்தா நடிக்க வந்ததில் இருந்தே ஏழை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார்.

ஏழை குழந்தைகள், பெண்களுக்கு உதவுவதற்காக 2012-ம் ஆண்டு ‘பிரதியுஷா’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். தனது மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து இந்த அமைப்பின் மூலம் பல்வேறு மருத்துவ உதவி செய்கிறார். குழந்தைகளுக்கு தேவையான மருத்துவத்துக்கான நிதி திரட்ட நடிகர்-நடிகைகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், நிதி உதவியையும் செய்து இருந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்த 15 குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். சமந்தாவின் இந்த மனிதநேய சமூக சேவைக்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் சமந்தாவை ஏராளமானோர் வாழ்த்தி வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.