தென் இந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வருகிற ஜனவரி 6-ந் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.
ரஜினி, கமல் உட்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெற உள்ளது. இதில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோத உள்ளனர்.