செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு | ஆய்வில் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு | ஆய்வில் எச்சரிக்கை

1 minutes read

சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.

விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்த ஆய்வில் கூறியுள்ளதாவது,

சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுபவர்கள் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். வலைத்தளங்களில் பதிவிடும் மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளச் செய்கிறது. இறுதியில் சில நபர்களை சமூகத்திற்கு விரோதமாகவும் செயல்பட வைக்கிறது.

ஒரு பத்து நிமிடங்களை முகநுாலில் தங்களது நேரத்தை செலவிடுபவர்கள் அதில் பதிவிடப்படும் செய்திகளை கண்டு ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

நேரடியாக பேசி பழகுவது உறவினர்களுடன் நண்பர்களுடன் பேசுவது ஆகியவற்றை விட சமூக வலை தளங்களில் நேரத்தை செலவிடுவது நல்லது என்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டனர்.

இதில் கூகுளின் மூலமாகவே வாடகைக்கு புக் செய்வது, அனைத்து விதமான பொருட்களையும் வாங்குவது என அனைத்து சாதாரண சமூக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடருகிறது.

விடுமுறையை கழிக்க கூகுளில் வரும் டாப் 10 ஹோட்டல்களை நம்பி அங்கு செல்கின்றனர். உண்மையில் அது நாலாந்தர ஹோட்டல்களாகவும் இருக்கலாம் ஆனால் அதற்கான கமிஷனையும் கூகுளின் இடைத்தரகர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

நாம் தரத்தை பலி கொடுத்து இணையதளங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். நமக்கு தேவையில்லை என்றாலும் ,அவை நமது மூளையை சேதப்படுத்தினாலும் நாம் இணையதளங்களையே நம்பி இருக்கிறோம். அதனுடன் நாம் ஏதோ வகையில் பிணைக்கப்பட்டுள்ளோம்.

ஒரு வகையில் இந்த அடிமைத்தனத்திலிருந்து மீள இணையதளத்தையும் சமூக வலை தளங்களையும் பயன்படுத்தி நண்பா்களையும் ஒரு இடத்திற்கு வரவழைத்து மனம் விட்டு பேசலாம். அடிக்கடி இது போன்ற கூடுதல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றை நடத்தலாம். இவை நன்மை பயக்கும்.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

நன்றி : jaffnavision இணையத்தளம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.