பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கையில், வரவுசெலவுத் திட்டத்தை நாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
ஆகவே இந்த ஒரு நிலை இருக்கின்ற காரணத்தால் தொடர்ச்சியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்தால், ஜனாதிபதிக்கு எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு பிரச்சினை இருக்கும் என்ற காரணத்தினால், தான் மஹிந்த ராஜபக்ஸ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறினார்.
முன்னதாக, மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.