செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தேனை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா…!

தேனை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா…!

1 minutes read

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபதுவகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டுவிடுகிறது.

கண் பார்வைக்கு: தேனை கேரட்சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒருமணி நேரத்திற்குமுன் பருகினா ல் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு: சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொ ண்டை வலி, மார்புசளி, மூக்கு ஒழு குதல் மற்றும்  மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவார ணம் கிடைக்கும்.

ஆஸ்துமா: அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமா கும்.

இரத்த கொதிப்பு: ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி  தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை)  சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு: ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமு ம்  காலைக்கடன்களுக்குமுன் பருகவும். இது இரத்த சுத்திக ரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை  சுத்தமாக்கவும்உதவும்

இதயம்: அனைஸ் பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்கு சக்தி அதிகரிக்கும்.

குறிப்பு: தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். 3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. தேன் பல மலர்களின் மதுரம் கலந்த  ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும்.

நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

 

நன்றி : வெப்துனியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.