அகத்தி கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தம் தனியும். முருங்கைக் கீரை – நீரழிவை நீக்கி, கண் பார்வை அதிகரிக்க செய்யும்.
கல்யாணி முருங்கை – சளி, இருமல் நீங்கும்.
முள்ளங்கி கீரை – நீர் அடைப்பு நீங்கும்.
மணத்தக்காளிக் கீரை – வாய், வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
பருப்புக் கீரை – பித்தம், உடல் சூடு குறைக்கும்.
தூதுவளைக்கீரை – ஆண்மையை பெருக்கும். சரும நோய், சளியை போக்கும்.
பொன்னாங்கன்னி – மேனி அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
காசினிக்கீரை – சிறுநீரகத்தை செயல்படவைக்கும்.
புளிச்ச கீரை – கல்லீரல் பலமாகும். மாலைக் கண்நோய் நீங்கும்.
பசளைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.
சுக்கா கீரை – ரத்த அழுத்தம் மற்றும் மூலத்தை போக்கும்.