செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 10 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சாதனை

10 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சாதனை

1 minutes read

இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோள் உள்ளிட்ட 10 செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ரொக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி, திட்டமிட்ட இலக்குகளில் நிலை நிறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ரொக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரொக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளும், 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

குறித்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ரொக்கெட் ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து ஏவ ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

26 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ரொக்கெட் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 3.02 மணிக்கு புறப்படுவதாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கவுண்ட்டவுன் நேரம் 5 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. ரொக்கெட் புறப்படும் நேரம் 3.12 மணியாக மாற்றப்பட்டது. அதன்படி 3.12 மணிக்கு ரொக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

புறப்பட்ட சில நிமிடங்களில் எல்லாம் குறிப்பிட்ட இலக்குகளில் 10 செயற்கைகோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாகவும், அவை வெற்றிகரமாக செயற்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியா விண்ணில் செலுத்தி உள்ள புவி ஆய்வு செயற்கைகோள், அனைத்து கால நிலைகளிலும் செயற்படக்கூடியதாகும்.  விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் இந்த செயற்கைகோள் செயற்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.