September 22, 2023 5:28 am

கெளதம் மேனனின் படத்தில் பொலிஸ் ஆக மாறும் அஜித்!கெளதம் மேனனின் படத்தில் பொலிஸ் ஆக மாறும் அஜித்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ajith

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜீத். படத்தை தயாரிப்பவர் ஏ.எம்.ரத்தினம். எம்.ஜி.ஆருக்கு காவல்காரன், சிவாஜிக்கு தங்க பதக்கம், ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு காக்கிச் சட்டை, சூர்யாவுக்கு காக்க காக்க, விக்ரமிற்கு சாமி அதே மாதிரி அஜீத்துக்கு உருவாகப் போகும் படம்தான் கெளதம் மேனனின் அடுத்த படம்.
இதற்காக அஜீத், ஜிம்மே கதியாக கிடந்து இதுவரை 7 கிலோ எடை குறைத்துள்ளார். எல்லா ஹீரோக்களும் சிக்ஸ் பேக்ஸ் வைத்துதான் புஜபலத்தை காட்டியிருக்கிறார்கள். இப்போது அஜீத்தும் அதற்கு மாறுகிறார். அதுவும் 8 பேக்ஸ் வைக்கிறாராம். படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் தனது கால் ஆபரேஷனைக்கூட தள்ளி வைத்து விட்டு முழு மூச்சுடன் போலீஸ் பயிற்சி எடுத்து வருகிறார். பொருளாதார சிக்கலில் இருக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், இயக்குனர் கெளதம் மேனன் இருவருக்கும் சேர்த்து அஜீத் ஜிம்மில் வியர்வை சிந்திக் கொண்டிருக்கிறார்.
சூர்யாவுக்காக எழுதிய போலீஸ் கதையில் அஜீத்திற்காக சில மாற்றங்களை செய்துள்ளார் கெளதம் மேனன். இந்த மாதம் 15ந் தேதி படப்பிடிப்புகள் தொடங்குகிறது. தீபாவளி விருந்தாக படத்தை தரப்போகிறார்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்