சென்னை பாலிவுட் ஹீரோயின்கள் தொடங்கி டோலிவுட் ஹீரோயின்கள் வரை பிடித்த நபரின் பெயரை டாட்டூ போட்டுக்கொள்வது பேஷன். நடிகை நயன்தாரா தனது மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் பிரபு என்று பச்சை குத்தி இருந்தார். காதல் முறிந்த பிறகும் அந்த பெயரை அழிக்காமல் அதே டாட்டூவுடன் படங்களிலும் நடித்து வருகிறார்.
த்ரிஷா தனது உடலில் பூ வடிவில் பச்சை குத்தி இருப்பதுடன் முதுகில் தனது ராசி சின்னமான ரிஷபம் வரைந்திருக்கிறார். இந்நிலையில் தொடையிலும், கைகளிலும் ஜெயம் ரவியின் உருவத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறார். இதை வேறுமாதிரியாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம். ‘பூலோகம் படத்தில் ஜெயம் ரவி பாக்ஸராக நடிக்கிறார். அவரது காதலியாக த்ரிஷா நடிக்கிறார். இப்படத்துக்காகத்தான் ஜெயம் ரவியின் உருவ டாட்டூவை த்ரிஷா வரைந்திருக்கிறார். சூட்டிங் முடிந்ததும் ரவியின் டாட்டூவை அழித்துவிட்டார்.
வழக்கமாக காதலி தனது காதலன் பெயரை டாடூவாக எழுதிக்கொள்வார்கள். இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காக காதலனின் உருவத்தையே காதலி டாட்டூவாக வரைந்திருப்பதுபோல் படமாக்கினோம். இது டூப்ளிகேட் டாட்டூதான். அதனால் எளிதில் அழித்துவிட்டு, சூட்டிங் நடக்கும்போது மீண்டும் வரையலாம் என பட யூனிட்டார் தெரிவித்தனர்.
0