December 7, 2023 4:46 am

சம்பளம் ஒரு பொருட்டல்ல!சம்பளம் ஒரு பொருட்டல்ல!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

Untitled

நடிகை தப்சி தற்போது இந்தி திரைப்படங்களில் பிஸியாக உள்ளார். அங்கு ‘ரன்னிங் சாதி டாட்காம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஹிட்டானால் இந்தியில் ஒரு ரவுன்ட் வரும் முடிவில் இருக்கிறாராம். மும்பையிலேயே வீடு பார்த்தும் குடியேறி விட்டார்.

தமிழில் ‘முனி 3ஆம் பாகம்’ மற்றும் ‘வைராஜா வை’ என இரு திரைப்படங்கள் கைவசம் உள்ளன. நல்ல கதைகள் அமைந்தால் சம்பளத்தை குறைக்க தயார் என்றும் அறிவித்து உள்ளார்.

இது குறித்து தப்சி அளித்த பேட்டி விவரம் வருமாறு,

இந்திக்கு போனாலும் தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள டைரக்டர்கள் எனக்கு பொருத்தமான கதையாக இருந்தால் அதில் நடிக்க நிச்சயம் என்னை தேடி வருவார்கள்.

இந்தியில் ‘ரன்னிங் சாதி டாட்காம்’ படம் வென்றால் அங்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நல்ல கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால் சம்பளம் பொருட்டல்ல. அதை குறைக்கவும் தயார் என்று தப்சி கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்