March 24, 2023 3:06 am

எல்லா விடயத்திலும் அஜீத் அல்டிமேட்தானா !!எல்லா விடயத்திலும் அஜீத் அல்டிமேட்தானா !!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார்.

எத்தனை லட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்வார் – ரஜினிகாந்த். இளம் தலைமுறை நடிகர்களில் விஜய், விஜயகாந்த் மாதிரி. எந்தவொரு உதவிகளைச் செய்தாலும் ஊரைக்கூட்டித்தான் கொடுப்பார் விஜய். பத்து ரூபாய் நோட்புக் கொடுப்பதைக் கூட பத்திரிகையாளர்களை அழைத்துத்தான் கொடுப்பார்.

சில மாதங்களுக்கு முன் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 5 லட்சம் கொடுத்ததும் இப்படிப்பட்ட பப்ளிசிட்டி ரகம்தான்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அஜித், ரஜினிகாந்த் மாதிரி. தன் வருமானத்தில் பெரும்பகுதியை நலிந்தவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார் அஜித்.

உதவி பெறுபவர்களுக்கே இது அஜித் செய்த உதவி என்று தெரியாமலே ஏராளமான பேருக்கு உதவிகளை செய்திருக்கிறார் அஜித்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் அஜித், தன்னிடம் பணிபுரிபவர்களை மட்டும் சும்மாவிட்டு விடுவாரா என்ன? கேளம்பாக்கம் அருகில் 12 கிரவுண்ட் நிலத்தை வாங்கி, தன்னிடம் வேலை பார்க்கும் 12 பேருக்கு கொடுத்ததோடு, அந்த நிலத்தில் தன் செலவிலேயே வீடும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்த இடமும் வீடும் தான் வாங்கிக் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமே வாங்கிக் கொண்டாராம். விஜய்யோ தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் வாடகை வாங்கிக் கொண்டுதான் வீடு கொடுத்திருக்கிறார். அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது.

ajith-rajini-fefsi-26-02-10

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்