December 7, 2023 1:24 am

ஆர்யா – அமலாபால் இருவரும் திடீர் திருமணத்தில் இணைந்துள்ளனர்.ஆர்யா – அமலாபால் இருவரும் திடீர் திருமணத்தில் இணைந்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அட்லி இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா நடித்த படம் ராஜா ராணி. இந்த படம் திரைக்கு வர இருந்த நேரத்தில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காகவே, ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடக்கவிருப்பது போன்று அழைப்பிதழை வெளியிட்டு பெரும் பரபரப்பு கூட்டினர்.

அந்த சமயத்தில் ஆர்யா-நயன்தாராவைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் உச்சகட்டத்தில் இருந்ததால் அது நிஜ திருமணத்திற்கான அழைப்பிதழ் போலவே இருந்தது.

ஆனால், அதையடுத்து ராஜா ராணியில் அப்படியொரு காட்சி இடம்பெறுகிறது என்று செய்தி வெளியிட்டு அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதேப்போல், சமீபத்தில் இது நம்ம ஆளு படத்திலும் சிம்பு- நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டியது போன்று ஒரு பப்ளிசிட்டியை முடுக்கி விட்டார் பாண்டிராஜ்.

இந்தநிலையில், பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்காகவும் ஆர்யா- அமலாபால் திருமணம் நடப்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கோவையில் நடந்த இந்த திருமண காட்சியையே படம் திரைக்கு வரும் நேரத்தில் பப்ளிசிட்டி செய்யவும் திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.

முற்றிலும் புதுமுகங்களே நடிக்கும் இப்படத்தில், தனுஷ், ஆர்யா, பிரகாஷ்ராஜ், அமலாபால், நஸ்ரியா ஆகியோர் நட்புக்காக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

arya

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்