March 24, 2023 2:37 am

உதயநிதிக்கு ஆப்படித்த நயந்தாராஉதயநிதிக்கு ஆப்படித்த நயந்தாரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாராவை தனது ஆஸ்தான நாயகி போன்று பில்டப் கொடுத்தார் உதயநிதி. எனது முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடிக்கவே அவரைத்தான் அழைத்தோம்.

ஆனால் அப்போது அவர் நடிக்கிற மூடில் இல்லாததால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினோம் என்றுகூட சொன்னார். அதோடு தனது மூன்றாவது படமான நண்பேன்டா படத்திற்கும் அவரையே புக் பண்ணியவர் இனி எனது படங்களில் அதிகமாக நயன்தாரா தான் நடிப்பார் என்றும் சொன்னார்.

ஆனால், இப்போது பார்த்தால், நண்பேன்டா படத்திற்கு இரண்டு வாரம் மட்டுமே கால்சீட் கொடுத்து நடித்த நயன்தாரா, சிம்பு, ஜெயம்ரவியுடன் நடிக்கும் படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வந்தவர், இப்போது சில தெலுங்கு படங்களுக்கும் கால்சீட்டை வாரி வழங்கி விட்டு உதயநிதி படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுக்காமல் டீலில் விட்டுக்கொண்டிருக்கிறாராம்.

இதனால் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் நின்று கொண்டிருக்கிறார்கள். அதோடு, ஏற்கனவே நண்பேன்டா படத்தில் நடிக்க காத்திருந்த காஜல்அகர்வாலை கழட்டிவிட்டு, நயன்தாராவை கமிட் பண்ணியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் உதயநிதி. ஆக, இதன்பிறகு உதயநிதியின் படங்களில் நயன்தாரா இருக்க மாட்டார் என்று தெரிகிறது.

nayan-uthaya

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்