Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாரா அம்மாவாகிறார் நயன்தாரா அம்மாவாகிறார்

நயன்தாரா அம்மாவாகிறார் நயன்தாரா அம்மாவாகிறார்

1 minutes read

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். அதிலும் ஒரு கைக் குழந்தைக்கு அம்மாதான் என்றால் கூட சம்மதிக்க மாட்டார்கள். எங்கே, அதற்குப் பின் தங்களை அம்மா கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கக் கூப்பிடுவார்களோ என்ற அச்சம் உண்டு. அந்தக் காலத்தில் ஹீரோக்கள் 50 வயதைக் கடந்த பின்னரும் கல்லூரிக்குச் செல்லும் ஹீரோக்களாக நடித்த கதை உண்டு. இந்தக் காலத்தில் ஹீரோயின்கள் 30 வயதைக் கடந்தாலும் பள்ளி மாணவியாகக் கூட நடிக்கிறார்கள். ஆனால், தப்பித் தவறி அம்மா கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பேய்க் கதையான இந்தப் படத்தில் ‘நெடுஞ்சாலை’ படத்தின் நாயகன் ஆரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் அஷ்வின் யாரிடமும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அனுபவம் இல்லாதவர். படத்தின் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்வதற்குப் பதிலாக, அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியக் காட்சியை ஐந்து நிமிடத்திற்கு படம் பிடித்துக் காட்டி, படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதே காட்சியை நயன்தாராவிடமும் காட்டி அவரையும் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.
“நயன்தாரா ஒரு ஸ்டாரைப் போலப் பழகாமல் மிகவும் எளிமையாகப் பழகுகிறார். புது இயக்குனர்தானே என அவர் எந்த கேள்வியும் கேட்பதில்லை. இந்தப் படத்தில் அவர் நடிக்க சம்மதித்தது எந்த அளவிற்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ, அவர் நடிப்பும் மிகவும் அற்புதமாக உள்ளது,” என்கிறார் படத்தின் இயக்குனர் அஷ்வின்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More