நடிகை ஷ்ருதி ஹாசன், இந்த வருடம் தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் என்பதைப் பலராலும் நம்பமுடியவில்லை.
என் பெற்றோர் புகழ்பெற்றவர்களாக உள்ளதால் என்னைப் பற்றிய தகவல்கள் எல்லாமே அனைவரிடமும் உள்ளன. சினிமாவில் பலரும் பலவருடங்களாக 25 வயதிலேயே உள்ளார்கள். 30 வயதைத் தொடும் இந்தப் புதிய தருணம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பலவருடங்களுக்குப் பிறகு சென்னையில் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளேன் என்று ஸ்ருதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நேற்று தனது பிறந்தநாளை சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடினார் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன், அக்ஷரா ஆகியோர் ட்வீட் வழியாகவும் ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார் ஸ்ருதி.