செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தற்போது திரிஷாவும் அரசியலில்தற்போது திரிஷாவும் அரசியலில்

தற்போது திரிஷாவும் அரசியலில்தற்போது திரிஷாவும் அரசியலில்

0 minutes read

தமிழ் திரையுலகில் பல நடிகைகள் அரசியலில் குதித்து புகழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது திரிஷாவும் அரசியலில் குதித்துள்ளார். ஆனால், திரிஷா குதித்தது நிஜ அரசியலில் அல்ல, தற்போது அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘கொடி’ படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

‘காக்கி சட்டை’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வரும் அடுத்த படம் ‘கொடி’. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். அண்ணன், தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் தனுஷ் கட்சி மேடையில் பேசுவது போன்று புகைப்படம் வெளியானது. அதுபோல் தற்போது திரிஷா அரசியல்வாதி வேடத்தில் தோன்றும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் திரிஷா, ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.