செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் ‘ரெமோ’சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் ‘ரெமோ’

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் ‘ரெமோ’சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் ‘ரெமோ’

1 minutes read

தமிழ் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் தலைப்பை இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட திட்டமிட்டனர். அதன்படி இன்று மாலை 6 மணி அளவில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் ‘ரெமோ’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெமோ என்று எழுதப்பட்ட பெரிய கேக்கை சிவகார்த்திகேயனுக்கு பரிசாக படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.

இப்படத்தை 24ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘ரஜினிமுருகன்’ படத்தை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் இணைந்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பணிபுரிந்து வரும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.