ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தில் ரஜினி, தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததும், இப்படத்திற்கான டப்பிங் பணிகள் முழுவீச்சில் தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தை மலாய் மொழியிலும் டப் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு மலேசியாவில் ரசிகர்கள் ஏராளம் என்பதால், மலாய் மொழியில் டப் செய்யு முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ் சினிமாவில் ஒரு படம் மலாய் மொழியில் டப் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ரஜினியுடன் ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ், கலையரசன், தினேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். மே மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.