செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அடுத்த வருடம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடும் ‘பாகுபலி’.இரண்டாம் பாகத்தில் ஸ்ரேயாஅடுத்த வருடம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடும் ‘பாகுபலி’.இரண்டாம் பாகத்தில் ஸ்ரேயா

அடுத்த வருடம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடும் ‘பாகுபலி’.இரண்டாம் பாகத்தில் ஸ்ரேயாஅடுத்த வருடம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடும் ‘பாகுபலி’.இரண்டாம் பாகத்தில் ஸ்ரேயா

1 minutes read

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த வருடம் வெளிவந்த படம் ‘பாகுபலி’. இப்படத்தை எடுக்கத் தொடங்கும்போதே இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டார் இயக்குனர் ராஜமௌலி.

அதன்படி, முதல் பாகம் வெளியாகி பெரிய வசூலையும், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து, ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் படம் என்பதால், முந்தைய பாகத்தில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த பாகத்திலும் நடித்து வருகிறார்கள். தற்போது கூடுதலாக, இரண்டாம் பாகத்தில் ஸ்ரேயாவும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்தில் ராணாவுக்கு ஒரு மகன் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஆனால், யார் ராணாவின் மனைவி என்பதை காட்டியிருக்க மாட்டார்கள். அதனால், இரண்டாம் பாகத்தில் ராணாவின் மனைவியாக நடிப்பதற்கு ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரேயாவுக்கு தற்போது தமிழ், தெலுங்கு என எந்த மொழியிலும் சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடிப்பது அவருக்கு தமிழ் மட்டுமில்லாது அனைத்து மொழிகளிலும் மறுபடியும் வாய்ப்புகள் அமைய பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஸ்ரேயா நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.