செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கோலிவுட்டில் தற்போது விவாகரத்து செய்திகள்கோலிவுட்டில் தற்போது விவாகரத்து செய்திகள்

கோலிவுட்டில் தற்போது விவாகரத்து செய்திகள்கோலிவுட்டில் தற்போது விவாகரத்து செய்திகள்

1 minutes read

கோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி – பிரியதர்ஷன் விவாகரத்து விவாகரம் நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ந்து கோலிவுட்டில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிற நிலையில், சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பாபி சிம்ஹாவும் – ரேஷ்மி மேனனும் பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும்  செய்தி பரவியது.

இந்த செய்தி கோலிவுட்டில் தீயாய் பரவிக்கொண்டிருக்க, இதை அறிந்ததும் சுதாரித்துக் கொண்ட பாபி சிம்ஹா உடனடியாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், வதந்தி குறித்து நான் இங்கு எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. எங்களைப் பற்றிய வெளிவந்த செய்திகளை நினைத்து கவலைப்பட்டு எங்களுக்கு போன் செய்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சந்தோஷமாக உள்ளோம். நாங்கள் பிரிப்பது பீட்சாவை மட்டும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.