செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ரெமோ’ | குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ | குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்

‘ரெமோ’ | குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ | குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்

0 minutes read

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளுக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். காஞ்சிபுரம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்த குழந்தைகள் அனைவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பை விரும்பி ரசித்ததாக தெரிவித்தனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, சீன் பூட், அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.