செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளராக சர்வதேச அங்கீகாரம்விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளராக சர்வதேச அங்கீகாரம்

விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளராக சர்வதேச அங்கீகாரம்விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளராக சர்வதேச அங்கீகாரம்

1 minutes read

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்தார்.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தொடங்கினார். இப்படத்தை சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி என்பவர் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கேரளாவில் நடைபெறும் 21-வது கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த திரைப்பட விழாவில் திரையிட போட்டியிட்ட 18 படங்களில் இந்த படம் மட்டுமே தேர்வாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளராக இந்த படம் சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது அவருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.