இந்நிலையில், தற்போது முத்துக்குமாரசாமி ‘Shades of Love’ என்ற பெயரில் புதிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் இடம்பெறும் பாடலை முத்துக்குமாரசாமியே பாடியுள்ளார். நட்சத்திரா என்ற புதுமுக நடிகை இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.
இந்த ஆல்பத்தின் பாடல்களுக்கான வரிகளை லண்டனில் வசித்துவரும் முல்லை நிஷந்தன் என்பவர் எழுதியிருக்கிறார். நவீன் ஜான்சன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவை கண்ணன் கவனித்துள்ளார். தீபக் எஸ்.துவாராகாந்த் எடிட்டிங் செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை எல்.வி.கணேசன் தயாரித்துள்ளார்.
இந்த ஆல்பத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற அக்டோபர் 24-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர். இந்த சிங்கிள் டிராக்கை ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘கபாலி’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவுள்ளார்.