செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஒரு பாட்டுக்கு ரூ.1 கோடி.ஒரு பாட்டுக்கு ரூ.1 கோடி.

ஒரு பாட்டுக்கு ரூ.1 கோடி.ஒரு பாட்டுக்கு ரூ.1 கோடி.

1 minutes read

ஒரு பாட்டுக்கு ஆடுவதா? என்று முன்னணி நாயகிகள் கோபப்பட்ட காலம் உண்டு. இப்போது நான் ஆட தயார். நீங்கள் பணம் தர தயாரா? என்று நடிகைகள் ‘ரேட்’ சொல்லி ஆடுகிறார்கள்.

தெலுங்கில் குத்துப்பாட்டுக்கு முன்னணி நாயகிகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி….

தமன்னா சமீபத்தில் கர்நாடக முன்னான் முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில் கவுடா ஹீரோவாக நடித்த ‘ஜாக்குவார்’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வாங்கிய சம்பளம் ரூ.75 லட்சம். ‘அல்லுடு சீனு’, ‘ஸ்பீடுன்னோடு’ படங்களில் குத்தாட்டம் போட பெற்ற தொகை தலா ரூ.1 கோடி.

ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் ஒரு பாட்டுக்கு காஜல் அகர்வால் ஆடினார். இதற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.50 லட்சம். மகேஷ்பாபு- தமன்னா நடித்த ‘ஆகடு’ படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு ஆடினார். இதில் இவருக்கு சம்பளம் ரூ.40 லட்சம். இதுபோல் ‘நாயக்’ படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சார்மியும் ரூ.40 லட்சம் வாங்கி இருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட மற்ற நாயகிகளும் ஒரு பாட்டுக்கு ஆட நாங்களும் ‘ரெடி’ என்று தயாராகி வருவதாக தெலுங்கு பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.