செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ராகவா லாரன்ஸின் தொடரும் மனிதாபிமானம் மிக்க செயல்கள்ராகவா லாரன்ஸின் தொடரும் மனிதாபிமானம் மிக்க செயல்கள்

ராகவா லாரன்ஸின் தொடரும் மனிதாபிமானம் மிக்க செயல்கள்ராகவா லாரன்ஸின் தொடரும் மனிதாபிமானம் மிக்க செயல்கள்

0 minutes read

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் அறுவை சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை இவருடைய முயற்சியில் 130 குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது 131-வது குழந்தையாக பிரியங்கா என்ற குழந்தைக்கு தற்போது இருதய அறுவை சிகிச்சை ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.