0
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலைக்கு வந்து சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கேரள அரசு சார்பில் 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு பாடகர்கள் ஜெயச்சந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
2016-17-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சபரிமலையில் வருகிற ஜனவரி 14-ந் தேதி பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.