‘காலா’ படம் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ளது. இப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படங்களில் நடித்து முடித்த பிறகு ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். தற்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
புதிய பட அறிவிப்பு வெளியாகி இருப்பது, ரஜினி அரசியல் பிரவேசம் செய்ய இருக்கும் நிலையில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.